Homage to Chittappa – My Hero.

On July 30, last year, I wrote a blog to celebrate the eightieth birthday of my uncle (Mani Chittappa) for us. Little did I realize that I would bid adieu to him in less than a year. He passed away few hours back.

Here is the link to blog. Chittappa, My Hero, Is Turning Eighty.

I reread the blog to see if I can add something to it but I could not find any. But then my friend Naga had posted his comment on the blog and one sentence summarized it all. His comment was,

“Is it because friendly people like your Chittappa were born mostly on 30th of July, did UN declare that day as International day of friendship?”

Indeed it is!  Adieu Thanu Sanara Narayanan aka Mani Chittappa.

I have posted Naga’s comment below.

“ஆயிரம் பிறை கண்ட மணி சித்தப்பாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து விடு ரமேஷ்.

உன் மணி சித்தப்பா மாதிரி நட்பானவர்கள் அதிகம் பிறந்ததினால் ஜுலை 30 ம் தேதியை “ஐநா”, நண்பர்கள் தினமாக 2011 முதல் கொண்டாட துவங்கியதோ 🤔

அப்பாவின் தம்பியாகி சித்தப்பா ஆகுபவர்களின் மேல் இயற்கையாகவே ஒர் பாசம் நமக்கு வருவது உண்டு, அது தான் ஆடாவிட்டாலும் தசையாடும் ரத்தபந்தம், ஆனால் சித்தியின் கணவராக சித்தப்பா ஆனாவர் மேல் நீங்கள் அனைவரும் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்றால் அவர் இயல்பாகவே மிகுந்த இனிமையானவராக தான் இருக்கனும்.

உங்களின் நெருக்கடியான நேரங்களில் சாய்வதற்கு தோள் கொடுப்பவராக இருந்து இருக்கிறார் அதனால் தான் உங்களுக்கு அவர் மேல் இவ்வளவு ஈர்ப்பு.

நம் இளமைக்காலங்களில் பெரியவர்கள் அனைவரும் காசு விஷயத்தில் கஞ்சமாக இருந்தார்கள் என்கிற மனவருத்தம் நாம் எல்லோருக்கும் அப்போது உண்டு,இவரிடம் காசு இருந்ததோ இல்லையோ உங்களுக்கு செலவழிக்க மனசு இருந்துள்ளது, அதுவே அவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது, இந்த மனசு பொதுவாக எல்லோரிடமும் இருப்பதில்லை.

அவர் மேலும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் உங்கள் அனைவருக்கும் தோள் கொடுப்பவராக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

உனது சிறந்த எழுத்துகளில் ஒன்றை உனது மணி சித்தப்பாவுக்கு அர்ப்பணித்து உள்ளாய் ரமேஷ்,பாராட்டுகள். “

4 responses to “Homage to Chittappa – My Hero.”

  1. மணி சித்தப்பாவை இழந்து வாடும் உனக்கும் குடும்பத்தாருக்கும் தாங்கும் சக்தியை இறைவன் அளிப்பாராக

    அவர் உயிருடன் உள்ள போதே அவரைப் பற்றிய உனது எண்ணங்களை ப்ளாக் மூலம் தெரிய படுத்தியது இறைவன் உனக்களித்த வரம் என்றே நினைக்கிறேன்,இந்த ஜூலை 30 ம் தேதி அவருக்கு வாழ்த்து சொல்லி உன்னை ஆச்சரியப் படுத்தலாம் என நினைத்திருந்தேன்,இறைவன் அதிர்ச்சியை கொடுத்து விட்டான்,எனது ஆழ்ந்த இரங்கல்கள்
    ஓம் ஷாந்தி 😢😢😢

    Like

  2. இதில் யார் அதிர்ஷ்டசாலீ.நல்ல நண்பனை பெற்ற நீயா இல்லை உன் போல் ஒரு நல்ல உறவை பெற்று,உன் தந்தை ஸ்தானத்தி ல் நீ வைத்துருக்கும் உன் சித்தப்பாவா.
    தெரியலை.

    Like

  3. Subramanian ganapathi raman Avatar
    Subramanian ganapathi raman

    Om Shanti

    Like

Leave a comment