திரு இரா முத்துசாமி, எனது கருமாரி அம்மன் கோவிலும் கணக்கு மார்க்கும் – சென்னை நாட்கள். blog படித்துவிட்டு, ‘இந்த அனுபவங்களையாவது தமிழில் எழுதுங்கள்’ என்று சொன்னார். எனது சில நண்பர்களும், உடன் பணிபுரிபவர்களும், “சார் நீங்க இங்கிலீஷில் எழுதினால் பார்க்கிறோம், ஆனால் படிப்பதில்லை. தமிழில் வருவதை தவறாமல் படிக்கிறோம்” என்றார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது தமிழில் எழுதலாம் என்று நினைத்தேன். பிரச்சினை என்னவென்றால் தமிழில் சிந்தித்து உடனே எழுதுவதைவிட ஆங்கிலத்தில் வேகமாக சிந்திக்க எழுத முடிகிறது. ஆங்கிலத்தில் ஒரு தடவை எழுதிய பின் அதை தமிழில் மொழியாக்கம் செய்ய நேரம் அதிகம் செலவாகிறது. எல்லாம் மெக்காலே (Thomas Babington Macaulay) கல்வி முறையில் கற்றதால் பெற்ற பலன்…
நான் ஆட்டோக்காரன்
இரண்டு வாரங்களுக்கு முன் மிக அழகான, திறமை மிக்க, மராத்தி நடிகை மிதிலா பார்க்கரின் Ted Talk – “It is OK not to have a plan” பார்த்துக் கொண்டிருந்தேன். Anna Kendrick’ன் Pitch Perfect மூலம் inspire ஆன அவரது cup song,YouTubeல் மிக பிரபலமானது.
அந்த Ted T alk -ல், அவரது வாழ்க்கையின் மிகக் கடுமையான சோதனைகள எதிர்கொள்ள உதவிய மும்பை riksha காரர்களுக்கு (தமிழில் ஆட்டோக்காரர்கள்) அவர் நன்றி கூறுகிறார். தினமும் மூன்று ஆட்டோக்காரர்களாவது அவரது சவாரியை நிராகரித்த பின் ஒருவர் அவர் சவாரியை ஒத்துகொள்வாராம். இந்த நிராகரிப்பு வாழ்க்கையில் பல சோதனைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவியது என்கிறார். மும்பை ஆட்டோக்காரர்கள் இந்த ஜென்மத்தின் சோதனைகளை எதிர்கொள்ள உதவினார்கள் என்றால் சென்னை ஆட்டோக்காரர்கள் அடுத்த ஏழு பிறவிகளில் வரப்போகும் சோதனைகள் சமாளிக்க உங்களை தயார்செய்து விடுவார்கள். ஆட்டோவைப் பற்றி படிக்கும்முன் அவரது பாட்டைப் பாருங்கள். மெய்மறக்க வைக்கும்.
முதல் இரு வரிகள் எனக்கு புரிந்த மராத்தியில்
அவள் ஒயிலாய் நடக்கையில், அவளது சுருள்முடி தென்றலில் துள்ளுகிறது
ஒரே ஒரு நீண்ட முடி, இடது கண்ணிற்கு முன்னால் விழுந்திருக்கிறது
மாலையில் மறையும் சூரிய கதிரைப்போல், தோட்டத்தில் கேவ்டா பூவைப்போல்
ஒரு பெண்நாகம் நெளிவதைப்போல்
எழுபதுகளில் நாங்கள் சென்னைக்கு குடிபெயர்ந்தபோது, சென்னையில் டாக்சிகள் நிறைய இருந்தன – அநேகமாக அம்பாசிடர் அங்கங்கு சில பியட் காரையும் பார்க்கலாம். டாக்சி ஸ்டாண்ட் எல்லா இடத்திலும் இருந்தது. நாங்கள் வசித்த மேற்கு மாம்பலம் அருகில் அசோக் நகரில் இருந்தது. ஆனால், அந்த காலத்திலேயே, மும்பையில் டாக்சி மற்றும் ஆட்டோவிற்கான எல்லைகள் சீராக பிரிக்கப்பட்டிருந்தது. தெற்கு மும்பையிலிருந்து sion வரை டாக்சி மட்டுமே செல்ல முடியும். அதற்கப்புறம் இரண்டுமே செல்லலாம். இன்றும் இந்தக் கட்டுப்பாடு தொடர்கிறது.
ஒரு இருபது வருட காலம் சென்னையிலிருந்து டாக்சிகள் காணாமல் போயிருந்தது. டாக்சிகளை சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலும் விமான நிலைய வாசலிலும் மட்டுமே பார்க்க முடிந்தது. எப்போது மற்றும் ஏன் இது மாறியது என்று சரியாக நினைவில் இல்லை. 1970களில் OPEC எண்ணெய் நெருக்கடி ஏற்பட்ட பின் உண்டான பெட்ரோல் விலை ஏற்றத்தினால் இது நிகழ்ந்திருக்கலாம் என நினைக்கிறேன். எட்டாத உயரத்திற்கு டாக்சி கட்டணம் சென்றதால் உருவான வெற்றிடத்தை ஆட்டோ நிரப்பியிருக்கும்.
டாக்சிகள் சென்னையிலிருந்து மறைந்த எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து, ஐந்தாண்டுகளுக்கு முன் Ola மற்றும் Uber அறிமுகமான காலம் வரை, சென்னைவாசிகளும், சென்னைக்கு பயணம் செய்தவர்களும், ஆட்டோ ஓட்டுனர்களின் பேச்சையும், ஒவ்வொரு நாளும் அம்பானி அல்லது டாடாவின் தினசரி வருமானத்தையும் எட்டிப் பிடிக்க நினைத்த அவர்களின் பேராசையையும் சந்திக்க நேர்ந்தது. சென்னை பாஷை பேசியவர்கள் ஆட்டோ ஓட்டுனர்களின் பிடியிலிருந்து எப்போதாவது தப்பித்தாலும், வெளியூரிலிருந்து வந்தவர்கள் முற்றிலும் இவர்களிடம் மாட்டிக்கொண்டனர்.
நாங்கள் இளைஞைர்களாக இருந்தபோது ஆட்டோ டிரைவர்களிடம், சாம தான பேத முறைகளில், கட்டணம் பற்றி திறன்பட பேச்சுவார்ததை நடத்தும் முறையை கற்று வைத்திருந்தோம். ஒரு நண்பன் இதை ஒரு கலையாகவே பயின்றிருந்தான். ஆட்டோக்காரர்கள் நாம் எங்கு செல்ல வேண்டுமோ அதைச் சொன்னால் அவர்கள் வேறு இடத்திற்கு போகிறேன் என்பார்கள். என் நண்பன், ‘பரவாயில்லை. நான் அங்கு வருகிறேன்’ என்பான். உடனே ஆட்டோக்காரர், ‘நான் இப்போது வீட்டுக்கு போகிறேன். அது முற்றிலும் வேறு திசையில் இருக்கிறது’ என்பார். உடனே நண்பன், ‘அதனாலென்ன? நானும் வருகிறேன். நான் இன்று உங்களுடன் வரத்தான் போகிறேன்’ என்பான்.
இந்த வாதத்தில் வெற்றி பெறமுடியாது என்பதை புரிந்துகொள்ளும் ஆட்டோக்காரர் குரலை உயர்த்தி, ‘உங்களை ஏற்றிக்கொள்ள முடியாது’ என்பார். நண்பன் உடனே, ‘சரி உன்னோட badge நம்பரையம் ஸ்டாண்ட் பேரையும் சொல்லு. அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் என்னுடைய நண்பர். அவரிடம் சொல்கிறேன். நாளையிலிருந்து நீ ஆட்டோ ஓட்ட முடியாதபடி செய்கிறேன்.’ வேறு வழியின்றி ஆட்டோக்காரர் அவனை ஏற்றி செல்வார். உண்மையிலேயே அவன் பெருபாலான இன்ஸ்பெக்டர்களை அறிந்திருந்தான்.
நான் சென்னையிலிருந்து சென்ற பிறகு, விடுமுறைக்கு சென்னை வரும்போதெல்லாம் ஆட்டோகாரர்களை சந்திக்க பயப்பட்டிருக்கிறேன். நண்பரிகளிடம் பைக்கை இரவல் வாங்கி பயணித்திருக்கிறேன் அல்லது பல்லவன் டிரான்ஸ்போர்ட்.
மற்றும் நான் வசித்துவந்த பூனாவில், ஆட்டோவும் (rear engine) வரப்பிரசதாமாக இருந்தது. ஆட்டோ டிரைவர்களும் நேர்மையாக இருந்தனர். பூனாவின் public டிரான்ஸ்போர்ட் மிக மோசமாக இருக்கும். கட்டணமும் அதிகம். மூன்று பேர் சென்றால் ஆட்டோ கட்டணம் பஸ் கட்டணத்தை விட குறைவாக இருக்கும். மீட்டரில் வருவார்கள் – எந்த இடத்திற்கும் – எவ்வளவு குறைவான தூரத்திற்கும். ஏழு, எட்டு வயது குழந்தைகளும் தனியாக ஆட்டோவில் போவார்கள். அவ்வளவு பாதுகாப்பாக இருக்கும். இதில் பழக்கப்பட்டுவிட்டு, சென்னை வரும்போது, முதலில் சந்திக்கும் ஆட்டோ ட்ரைவரே நம்மை கோபத்தின், வெறுப்பின் உச்சிக்கு கொண்டுசெல்வார்.
இந்த பிளாகை, சென்ற வாரம் ஆங்கிலத்தில் படித்த ஜெயகாந்த் எழுதிய கமெண்ட், “புனாவிலிருந்து சென்னைக்கு என்பது ரூபாய் பயணக்கட்டணம் இருந்த பொது, சென்ட்ரலிலிருந்து மேற்கு மாம்பலம் செல்ல ஆட்டோகாரர் நூற்று ஐம்பது ரூபாய் கேட்பார்.’
இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் நமக்கும் கிடைத்த பதில், “எல்லா ஆட்டோவுமே போலீஸ்காரர்களுக்கும் உள்ளூர் கட்சிகாரக்காரர்களுக்கும் சொந்தமானவை. யாரிடம் போய் complaint கொடுப்பது?” இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை போலீஸ் கமிஷனர் ‘அடாவடி ஆட்டோக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிக்கை விடுவார். நான்கு நாட்கள் எல்லாம் நன்றாக இருக்கும். மறுபடியும் – பழைய குருடி கதவைத் திறடி – கதைதான்.
ஆட்டோக்காரர்களின் இந்த அநியாய நாடகத்தின் உச்சம் சபரிமலை சீஸனில் நடந்தேரும். அனேகமாக எல்லா ஆட்டோக்காரர்களும் கருப்புடை அணிந்து தாடி வளர்த்துக்கொண்டு, சந்தனமும் குங்குமமும் தரித்து ‘சாமி சாமி’ என்றழைத்து நம்மை ஏமாற்றுவார்கள். ‘என்னப்பா இவ்வளவு அநியாயமாக கேட்கிறையே’ என்றால், ‘சாமி அப்படி சொல்லாதீங்க, மாலை போட்டிருக்கிறேன். நான் விரதமிருக்கிறேன்’ என்பார்கள்.
சுப்பர் ஸ்டார் ரஜிகாந்த்தால் கூட, ஒரு நாணயமான நேர்மையான ஆட்டோ டிரைவராக சூப்பர் ஹிட் திரைப்படம் பாஷாவில் நடித்தும் இவர்களது இமேஜை மாற்ற முடியவில்லை. மிகப் பிரபலமான ‘நான் ஆட்டோகாரன்’ பாட்டை எல்லா ஆட்டோவிலும் கேட்க முடிந்தாலும் அவர்களது பேச்சிலும் பேராசையிலும் எந்த மாற்றமும் இருக்கவில்லை. அப்பா ஒரு வழியாக blog தலைப்பை கட்டுரையில் கொண்டுவந்து விட்டேன். நான் ஆட்டோக்காரன் பாட்டு இதோ:
‘நான் ஆட்டோக்காரன்’ பாட்டு
இந்த அநியாயத்திற்க்கு எதிராக ஓரளவு வெற்றி பெற்றது முதலமைச்சர் ஜெயலலிதாதான். சில கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஒரு ஆறுமாத காலத்திற்கு சென்னை ஆட்டோவில் பயணம் செய்ய முடிந்தது. அதுவும் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே.
Google மேப் செய்த ஒரு குளறுபடி சென்னை ஆட்டோவின் சாகசங்களை நினைவிற்கு கொண்டு வந்தது. Rachna அவளது USA விசாவுக்காக சென்னை வந்திருந்தாள். புக் செய்த்தவுடன் Uber பத்து நிமிடம் காட்டியது. அப்புறம் வந்த message இதோ:
73 நிமிடங்களில் கடலிலிருந்து வரப்போகும் டாக்சி
சில நிமிடங்களில், வங்காள விரிகுடா கடல் மையத்திலிருந்து 73 நிமிடங்களில் டாக்சி வரும் என்றது Google. வேறு வழின்றி ஒரு ஆட்டோ பிடித்த்தோம். அருமையான டிரைவர். ரச்னாவிற்கு விசா interview எப்படி இருக்கும், எவ்வளவு நேரமாகும் என்று விளக்கமளித்துக்கொண்டிருந்தார். வாட்சப்பில் மோகனிடம் இதை சொன்னபோது, ‘அவருக்கு வேலை கொடுக்கலாம்’ என்றான்.
இந்த சந்தோஷம் வெகு நேரம் நீடிக்கவில்லை. நுற்றுக்கணக்காய் விசாவிற்காக விண்ணப்பம் செய்தவர்களும் அவர்களுடன் கூட வந்தவர்களுமாக consulate வாசலில் கூட்டம் அலைமோதியது. இது போதாதென்று ஒரு நூறு ஆட்டோக்காரர்கள் interview முடிந்து வெளியே வருபவர்களை கொக்கி போடக் காத்திருந்தார்கள். வாசலில் குழுமிய, விண்ணப்பகாரர்களுடன் வந்தவர்களையும் ஆட்டோக்காரர்களையும் போலீசார் விரட்டிக்கொண்டிருந்தனர். கூட வந்தவர்களை வெற்றிகரமாக ஓரங்கட்டிய போலீசால், ஆட்டோக்காரர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஐந்து நிமிடத்திற்கொருமுறை அவர்கள் வெளியே வந்தவர்களை பிடுங்கிக் கொண்டிருந்தனர்.
குழுமிய ஆட்டோ டிரைவர்கள், அடுத்த சவாரி யாருக்கு என்று சத்தமாக சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள். போலீசார் துரத்தினாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சிரிப்புதான் வந்தது. சண்டை சற்று சீரியசான போது, typical அந்த காலத்து சென்னை சண்டயயை நினைவு படுத்தியது. ஆங்கிலத்தில் சொல்வதுபோல் “it was more of sound than substance.”
ஒன்று மட்டும் எனக்கு முதலில் புரியாமல் இருந்தது. சென்னையின் மிகவும் பிஸியான ஏரியா, அதுவும் காலையில், மவுண்ட் ரோடுதான். எவ்வளவு சவாரி வேண்டுமானாலும் கிடைக்கும். அதை விட்டுவிட்டு இங்கே ஏன் ஒரு சவாரிக்காக இவ்வளவு போட்டி? அப்பறம்தான் சென்னை ஆட்டோகாரர்களின் வாழ்க்கை தத்துவம் நியாபகத்திற்கு வந்தது. ஒரு நாள் முழுவதும் (ஒரு எட்டு அல்லது பத்து மணி நேரம்) நியாயமாக வண்டி ஓட்டி சம்பாதிக்கும் காசை ஒரே பயணியிடமிருந்து கறக்க வேண்டும் என்ற உன்னதமான சிந்தனைதான் அது. பல வருடங்கள் இந்தியாவில் அநியாயமாக யார் என்னிடம் பைசா கேட்டாலும் அவர்களிடம் இந்த சென்னை ஆட்டோ philosphy பற்றி சொல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.
இந்த செயற்கை சண்டையும் சச்சரவும் வெளியே ரச்னாவிற்காக காத்தருந்த போது நேரத்தை கடத்த உதவியது. வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் இதைப்பற்றி மோகனிடம் சொன்னபோது, அவன், “மெட்ராஸ் ஆட்டோக்காரர்கள் நிறைய மாறிவிட்டார்கள் Ramesh. முன்பெல்லாம் Uber கட்டணத்தைப்போல் ஆறு மடங்கு கேட்பார்கள். இப்போது இரண்டு பங்குதான் கேட்கிறாரார்கள்” என்றான்.
இது உண்மையானால், சென்னைவாசிகள் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு விட்டு, நிறைய சந்தோஷத்துடன் நெடுனாட்கள் வாழலாம்.
சென்னை ஆட்டோகாரர்களின் வாழ்க்கை தத்துவம் நியாபகத்திற்கு வந்தது. ஒரு நாள் முழுவதும் (ஒரு எட்டு அல்லது பத்து மணி நேரம்) நியாயமாக வண்டி ஓட்டி சம்பாதிக்கும் காசை ஒரே பயணியிடமிருந்து கறக்க வேண்டும் என்ற உன்னதமான சிந்தனைதான்…. best summary of Chennai auto kkaran
தமிழில் ஒரு வாக்கியம் எழுத பத்து நிமிடம் ஆகும் வேளையில் எப்படி உன்னால் ஒரு blog எழுத முடிகிறது
உனது ஆர்வத்திற்கு எனது வணக்கங்கள்
LikeLike
Thanks Mohan. It is our mother tongue. So I am trying hard to write in that language.
LikeLike
Excellent Ramesh
LikeLike
Hi Thank You so much for the encouraging comment
LikeLike
நல்ல தமிழ் எழுத்தாக்கம் ரமேஷ் .👍🤝
LikeLike
Thanks Mahesh
LikeLike
Ramesh very nice. Awesome as you seem to be equally at ease witt our mother tongue. Vivid and crisp.
LikeLike
Hi Sada. Thanks. The credit should go the teachers who taught languages in School. I don’t think I wrote even half page in Tamil after I left school. But it is our mother tongue and we need to try hard to get back our forgotten skills to write in Tamil
LikeLike
நீங்கள் தமிழில் பிரமாதமாக எழதியுள்ளீர்கள் தொடருங்கள். தங்களுடைய சென்னை ஆட்டோ அனுபவம். சுவாரசியம் மிக்கது. நன்றி
LikeLike