சில திரைப்படங்கள் நம் நினைவிலிருந்து நீண்ட நாட்கள் நீங்குவதில்லை – நினைத்தாலே இனிக்கும் – அந்த வகையில் ஒன்று. முதலில் படத்தைப்பற்றி..
நான்கு பேர் கொண்ட ஒரு மெல்லிசைக்குழு, கதாநாயகன் கமல் ஹாசன், இணை கதாநாயகன் ரஜ்னிகாந்த். நாயகி ஜெயப்ரதா; ஒரு நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் செல்கிறார்கள். அபத்தமான ஒரு கடத்தல் முயற்ச்சி; அப்புறம் இந்திய சினிமாவின் ஆபத்பாந்தவன் – நாயகன் அல்லது நாயகிக்கு கான்சர் – இந்த படத்தில் நாயகிக்கு – படம் முழுவதும் பாட்டுகள். நாயகி மரணம்; சுபம்..
தமிழில் சிறந்த எழுத்தாளதர்களில் ஒருவரான சுஜாதாவும், மிகப் பிரபலமான டைரக்டர் பாலசந்தரும் சேர்ந்து எடுத்த படம். இரண்டு பெரிய ஹிரோக்கள்; மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் music, சிங்கப்பூரில் ஷூட்டிங். அனைத்தும் சேர்ந்த ஒரு ordinary படம்.
இந்த படம் எந்த வகையை சேர்ந்தது என்பது விவாதத்திற்க்கு உரியது. முடிவில் heroine இறக்கிறாள். Heroine இறப்பது என்பது tragedy. அதனால் காமெடி படம் இல்லை. ‘Abba the story’ மாதிரி மியூசிக்கல் என்றால் அதுவும் இல்லை. ம்யூசிக்கலுக்கு சண்டையும், கேன்சரும் “கை விரலா? toyota காரா?” போன்ற அபத்தமான பந்தயங்களும் தேவையில்லை.
ஆனால் நான் பலமுறை பார்த்த ஒரே ஒரு தமிழ் படம் இதுதான். 1979ல் நான் +1 படிக்குபோது முதலில் பார்த்தேன். என்னுடைய சினிமா மோகம் பத்தாதவது வகுப்பில் ஆரம்பித்தாலும், நிறைய படங்கள் பார்த்தது +1ல்தான். கோடை விடுமுறையில் நானும் சிவாஜியும் (Sivaji, introduced in VII A Vs VII C – My First Cricket Match) படத்தை 3 அல்லது 4 முறை பார்த்திருப்போம். கமல் மற்றும் ரஜினியின் தீவிர ரசிகனாக இருந்தபோது கண்ட குப்பை படங்களையும் பார்த்தது நினைவுக்கு வருகிறது. ஆடு புலி ஆட்டம் போன்ற படங்கள்..
அப்படி என்னதான் இந்த படத்தில் இருந்தது? நானும் எனது கடைசி பெஞ்ச் நண்பன் பிரேம் குமாரும் ஜெயப்ரதாவின் அழகில் பிரமித்து போயிருந்தோம். இருவருக்கும் ஆங்கிலத்தில் மேதாவி என்ற கர்வம் இருந்ததால் ஆங்கில வகுப்பில் எதையும் கவனிக்காமல் படத்தின் catch phraseஆன – YOURS LOVINGLY – என்று Block லெட்டரில் புத்தகத்தில் பல விதத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தோம். உண்மையில் பிரேம் ஆங்கிலத்தில் பேசுவதில் புலமையும், எழுதுவதில் திறமையும் பெற்றிருந்தான். விவேகானந்தரை பற்றி ஒரு recitation காம்பெடிஷனில் இருபதுக்கு 18 mark பெற்று அவன் முதலிடத்தையும், 10 மார்க் பெற்று நான் இரண்டாம் இடத்தையும் பெற்றோம் என்பதிலிருந்து, எங்களுக்குள்ளிருந்த திறமையின் இடைவெளி புரியும்.



நானும் ப்ரேமும், கமல் ஹாசனை போன்று 4 இன்ச் ஹீல்ஸ் பொருத்திய ஷூ அணிந்து சுற்றி கொண்டிருந்தோம். நாற்பத்தேழு ரூபாய்க்கு இந்த நாலு இன்ச் ஹீல்ஸ் ஷுவை மோகன் ராம் தான் கண்டுபிடித்தான் (introduced in Eye Witness – Movie with Mohan Ram.). கமல் இந்த கடையில்தான் முடி வெட்டி கொள்கிறார் என்று சக மாணவன் சொன்னதை நம்பி presidency ஹோட்டலில் இருந்த சலூனுக்கு சென்று முடி வெட்டி கொண்டேன். தெரு முனையில் இருந்த சலூன் 75 பைசா வாங்கிக்கொண்டிருந்த போது 5 ரூபாய் கொடுத்து ஹோட்டலில் முடி வெட்டி கொண்டது பெற்றவர்களுக்கு கொடுத்த மிகப் பெரிய கஷ்டம் என்பது சில வருடங்களுக்கு பின்புதான் புரிந்தது. கமல்தான் இந்தியாவின் மிகசிறந்த நடிகர் என்று நம்பியதால் ஒரு ஹீரோ ஒர்ஷிப் இருந்தது. அந்த கால கட்டத்தில் எல்லோரும் ரஜினி ஸ்டைலை copy அடித்ததால், அந்த influenceம் இருந்தது.
Kamal and Yours Truly – Similar Hairstyles; the comparison stops there….
அடுத்த attraction சிங்கப்பூர். படத்தில் சிங்கப்பூரை பார்ப்பது சொர்கத்தை பார்ப்பது போல் இருந்தது. மாருதி car இந்தியாவில் வந்திருக்கவில்லை. டப்பா அம்பாசடரையும் பியட்டையும் பார்த்து பூத்துப்போன கண்களுக்கு, டாட்சனும் டொயோட்டாவும் விருந்தாக இருந்தது. சில பாடல்களும் அவை இடம்பெற்றிருந்த சிங்கப்பூர் லொகேஷனும் மீண்டும் மீண்டும் படத்தை பார்க்க தூண்டின. பாரதி கண்ணம்மா போன்ற பாடல்கள்..
1996ல் நான் முதன் முதலில் சிங்கப்பூர் சென்றபோது நினைத்தாலே இனிக்கும் எங்கு shoot செய்யப்பட்டிருக்கும் என்று தேடிக்கொண்டிருந்தேன்.
அடுத்த இரண்டு வருடங்களில் நல்ல சினிமா (பிற மொழிகளில்) அறிமுகமான பின் தமிழ் படங்கள் மீதான மோகம் குறைந்து பின்பு சென்னையை விட்டு சென்ற பிறகு முழுதாக நின்று விட்டது. ஆனால் நினைத்தாலே இனிக்கும் மனதை விட்டு நீங்கவில்லை. பத்து வருடங்கள் கழித்து அந்த படத்தை உடுமலை பேட்டையில் மறுபடி பார்த்தேன். படத்தின் பல அபத்தங்கள் புரிந்தன. Continuity கூட இல்லாமல் எடுத்திருப்பது புரிந்தது. கமல் கத்தரிக்க பட்ட மீசையிலும் தொங்கு மீசையிலும் தோன்றுகிறார். சிங்கப்பூரில் ஒரு மாதிரி மீசையும் சென்னையில் ஒரு மாதிரி மீசையும் என்று வைத்துக்கொண்டாலும், சிங்கப்பூரில் நடப்பதாக சென்னையில் எடுத்த காட்சிகளில் அவ்வாறு தோன்றுவது எவ்வளவு அபத்தம்? எனக்கு தெரிந்த வரையில் சிங்கப்பூரில் முதலைப்பண்ணை இல்லை. அது மகாபலிபுரம் போகும் வழியில் உள்ள crocodile பார்க்கில் எடுத்தது. ஆனால் சிங்கப்பூரில் நடப்பதாக காட்டும் அந்த காட்சியில் நான் குறிப்பிட்ட இந்த அபத்த continuity புரியும். ஒரு poly கிளினிக்கில் டாக்டர் ஒரு பேப்பரை (X Ray?) பார்த்துவிட்டு cancer என்று confirm செய்கிறார். Oncologist, Cancer Hospital எதுவும் தேவையில்லை. ஆனாலும் படம் பள்ளி நாட்களை நினைவு படுத்தியதால், திரைப்படம் முடிந்தவுடன் மனம் கனமாகியது.
Different Moustache and it keeps changing in every scene….
நினைத்தாலே இனிக்கும், காதலிக்க நேரமில்லை போன்று ஒரு நகைச்சுவைப் படம் இல்லை. காதலிக்க நேரமில்லை தமிழில் வந்த சிறந்த நகைச்சுவை படம். Chashme Buddoor போன்று ஒரு all time classic movieயும் இல்லை. தமிழில் டாப் 50ல் வருமா என்பதே சந்தேகம்.
நினைத்தாலே இனிக்கும் digital முறையில் உருவாக்கம் செய்யப்பட்டு சில வருடங்களுக்கு முன்பு re-release செய்ய பட்டபோது யாரும் அதை பார்த்ததாக தெரியவில்லை. டிஜிட்டல் version வெளியானவுடன், அப்போது நான் அபு தாபியில் இருந்ததால், சிவாஜியை போனில் கூப்பிட்டு நீ பார்த்தாயா என்று கேட்டேன். படம் அந்த மாதிரி வந்ததே எனக்கு தெரியாது என்றான். Digital Version DVD கிடைக்குமா என்று தேடினேன். கிடைக்கவில்லை.
சென்ற வருடம் digital copy You Tubeல் கிடைத்தது. Download செய்து, மிக எதிர்பார்ப்புகளுடன் Home Theatre ல் போட்டு பார்த்தேன். பதினைந்து நிமிடங்களுக்குள் எனது மகள் Rachna “அப்பா என்னப்பா இருக்கிறது இந்த படத்தில்?” என்று எழுந்து சென்று விட்டாள். தனியாக உட்கார்ந்து பார்த்தேன். 35 வருடங்களுக்கு முன்பு பார்த்தபோது இருந்த பாதிப்பு இல்லை. ஆனால் சில இனிமையான பள்ளி நாட்களை நினைவு படுத்தியது. இரண்டே வார்த்தைகள் கொண்ட நினைத்தாலே இனிக்கும் பாட்டு பின்பு பல நாட்களுக்கு காதில் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது. நினைத்தாலே இனிக்கும் is definitely an affair to remember…
மிக அருமையான தமிழ் . உனது முயற்சிக்கு பாராட்டுக்கள்
LikeLike
தமிழில் மிகவும் அழகாக எழுதி இருக்கிறாய். உன் முயற்சியை நானும் பாராட்டுகிறேன். வசந்தி
LikeLike
தமிழில் மிகவும் அழகாக எழுதி இருக்கிறாய். என்னுடைய பாராட்டுக்கள். வசந்தி
LikeLike